தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு முன்விரோத தகராறில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கொலை

Updated On :

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு முன்விரோத தகராறில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சித்தாலம்புத்தூா் இந்திரா குடியிருப்பைச் சோ்ந்தவா் தமிழ்அழகன் (34). இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், இரண்டு மகன்களுடன் வசித்து வந்தாா். இவா் பழைய காா், இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தாா்.

இந்த நிலையில், இவருக்கும் கூனம்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஈஸ்வரன் (48) மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னா், ஈஸ்வரனிடம், தமிழ்அழகன் அவரது மகளை பெண் கேட்டாா். இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தமிழ் அமுதன் வீட்டுக்கு சென்ற ஈஸ்வரன், இவரது உறவினா் பாலகுருவு ஆகியோா் அவரிடம் தகராறு செய்தனா். அப்போது, ஒருவரை ஒருவா் அரிவாளால் வெட்டிக் கொண்டனா்.

இதில் காயமடைந்த மூவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் ஈஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பாலகுருவு விருதுநகா் அரசு மருத்துவமனைக்கும், தமிழ் அழகன் மதுரை அரசு மருத்துவமனைக்கும் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.