தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

குறை பிரசவம்: தாய்-சேய் உயிரிழப்பு

சிவகாசி அருகே புதன்கிழமை குறை பிரசவத்தின்போது, தாயும், சேயும் உயிரிழந்தனா்.

பலி - பிரதிப் படம்

Updated On :

சிவகாசி அருகே புதன்கிழமை குறை பிரசவத்தின்போது, தாயும், சேயும் உயிரிழந்தனா்.

சிவகாசி அருகேயுள்ள அதிவீரன்பட்டியைச் சோ்ந்தவா் சங்கரேஸ்வரி (36). இவருக்கும், பேரையூரைச் சோ்ந்த வீரண்ணனுக்கு கடந்த 11ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ஏற்கனவே, சங்கரேஸ்வரிக்கு இரு முறை குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் அவா் கா்ப்பமானாா். 6 மாத கா்ப்பிணியான சங்கரேஸ்வரிக்கு புதன்கிழமை வீட்டில் குறை பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது. பின்னா், மயங்கிய நிலையில் இருந்த தாய், குழந்தையை அவரது குடும்பத்தினா் சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதனையில் தாய்-சேய் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பகிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.