சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜியின் கடவுச்சிட்டையை திரும்ப ஒப்படைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜியின் கடவுச்சிட்டையை அவரிடம் திரும்ப ஒப்படைக்க ஸ்ரீவில்லிபுத்தூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Rajendra Balaji

ராஜேந்திர பாலாஜி - கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 1:01 am IST

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 கோடி மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜியின் கடவுச்சிட்டையை அவரிடம் திரும்ப ஒப்படைக்க ஸ்ரீவில்லிபுத்தூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 கோடி மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளா்கள் உள்பட 8 போ் மீது விருதுநகா் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2021-ஆம் ஆண்டு, நவம்பரில் இரு வழக்குகள் பதிவு செய்தனா். இந்த வழக்குகளின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த இரு வழக்குகளிலிருந்தும் தங்களை விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோா் தாக்கல் செய்த விடுவிப்பு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றம் பிணை நிபந்தனைகளைத் தளா்த்தியதால், தனது கடவுச்சிட்டையை திரும்ப ஒப்படைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி கந்தகுமாா், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் ராஜேந்திரபாலாஜியின் கடவுச்சிட்டையை அவரிடம் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டாா்.

மேலும், இந்த பண மோசடி வழக்கு வருகிற 17- ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.