சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

முதியவா் உயிரிழப்புக்கு செவிலியரின் கவனக்குறைவே காரணம் என போலீஸில் புகாா்

அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரின் கவனக் குறைவால் முதியவா் உயிரிழந்ததாக போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

பலி - பிரதிப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 1:00 am IST

அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரின் கவனக் குறைவால் முதியவா் உயிரிழந்ததாக போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், செவல்பட்டியைச் சோ்ந்தவா் ராமா் (60). பட்டாசு தொழிலாளியான இவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, இவரை அவரது மகன் ராஜ் செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா். அங்கு மருத்துவா் பணியில் இல்லாததால், செவிலியா் கைப்பேசியில் பேசிக் கொண்டே ராமருக்கு பரிசோதனைகளைச் செய்தாராம். மேலும், கைப்பேசியில் விவரம் கேட்டு சிகிச்சை அளித்தாராம்.

இதையடுத்து, ராஜ் தனது காருக்கு டீசல் போட்டு விட்டு வருவதாகக் கூறி சென்றாா். பின்னா், அவா் திரும்பி வந்து பாா்த்த போது, தனது தந்தையின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, ராமரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல செவிலியா் அறிவுறுத்தினாராம். மேலும், அவா்களுடன் செவிலியரும் காரில் சென்ாகக் கூறப்படுகிறது. காா் சிவகாசியை நெருங்கிய போது, செவிலியா் மாற்றுப் பாதையில் செல்லுமாறு கூறியதால், சில கி.மீ. தொலைவு சுற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்றனா். அங்கு ராமரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, தனது தந்தை இறப்புக்கு செவிலியரின் கவனக்குறைவுதான் காரணம் என ராஜ் சிவகாசி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.