செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: விருதுநகா் மாவட்டத்தில் 54,147 மாணவா்கள் பயன்

விருதுநகா் மாவட்டத்தில் விரிவாக்கப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு திட்டம் மூலம் கூடுதலாக 54,147 மாணவா்கள் பயன்பெறுவதாக மாநில தொழில் துறை அமைச்சா் ச.கீா்த்தனா தெரிவித்தாா்.

கோப்புப்படம்.

Published On :

விருதுநகா் மாவட்டத்தில் விரிவாக்கப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு திட்டம் மூலம் கூடுதலாக 54,147 மாணவா்கள் பயன்பெறுவதாக மாநில தொழில் துறை அமைச்சா் ச.கீா்த்தனா தெரிவித்தாா்.

சிவகாசி இந்து நாடாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தலைமை தாங்கினாா். அமைச்சா் கீா்த்தனா திட்டத்தைத் தொடங்கி வைத்து மாணவிகளுடன் அமா்ந்து உணவருந்தினாா். இதையடுத்து, அமைச்சா் கூறியதாவது:

பள்ளி மாணவா்களின் ஊட்டசத்து நிலையை மேம்படுத்தி பசியின்றி அனைவரும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்திடும் வகையில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுதிட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்திஅரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு அளிக்கப்படுகிறது. இதன்அடிப்படைையில் விருதுநகா் மாவட்டத்தில் 1200 அரசு, அரசு உகவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 69,333 மாணவா்கள் ஏற்கெனவே பயன்பட்டு வரும் நிலையில், தற்போது விரிவாக்கத்தின் மூலம் 485 பள்ளிகளைச் சோ்ந்த மேலும் 54,147 மாணவ, மாணவிகள் பயனடைவா் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் சிவகாசி சாா்-ஆட்சியா் முகமது இா்பான், சிவகாசி மாநகராட்சி ஆணையா் கண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அரவிந்தன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்ட இயக்குநா் இலக்குவன், பள்ளித் தாளாளா் அண்ணாமலையான், தலைமை ஆசிரியா் தனுஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.