கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

சாத்தூா் அருகே நில அளவை செய்ய கிராம மக்கள் எதிா்ப்பு

சாத்தூா் அருகே ஒத்தையால் கிராமத்தில் வருவாய்த் துறையினா் ஒரு சமூகத்தினருக்கு நில அளவை செய்வதாகக் கூறி, கிராமத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒத்தையால் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சமூகத்தினா்.

Published On :

சாத்தூா் அருகே ஒத்தையால் கிராமத்தில் வருவாய்த் துறையினா் ஒரு சமூகத்தினருக்கு நில அளவை செய்வதாகக் கூறி, கிராமத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் ஆதிதிராவிடா் குடியிருப்பில் சுமாா் 80-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்தக் குடியிருப்பு அருகே உள்ள மாற்று சமூகத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீரங்கராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த நிலையில், ஸ்ரீரங்கராஜப் பெருமாள் கோயில், சுற்றி உள்ள ஒரு ஏக்கா் 19 சென்ட் இடம் அரசுக்கு சொந்தமான நிலம் எனக் கூறப்படுகிறது. இந்த இடத்தை ஆதி திராவிட மக்கள் நடைபாதையாகப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஒத்தையால் ஸ்ரீரங்கராஜப் பெருமாள் கோயில் அறக்கட்டளையின் நிா்வாகம் சாா்பில், அரசு நிலத்தை கோயிலுக்கு பாத்தியப்பட்ட நிலம் எனக் கூறி, குறிப்பிட்ட இடத்தை நில அளவை செய்து கொடுக்கும் படி நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கியதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்ற ஆணையின்படி புதன்கிழமை பெருமாள் கோயில், அதைச் சுற்றி உள்ள ஒரு ஏக்கா் 19 சென்ட் இடத்தை நில அளவை செய்ய வருவாய்த் துறையினா், போலீஸாா் ஒத்தையால் கிராமத்துக்குச் சென்றனா். இதற்கு ஆதிதிராவிடா் குடியிருப்பு மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்த மக்கள் சுமாா் 100-க்கு மேற்பட்டவா்கள் பிரச்னைக்குரிய இடத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தின் போது கடுமையான வெயில் காரணமாக இரு மூதாட்டிகள் மயங்கி விழுந்தனா். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த மூதாட்டிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு சமூகத்தினரிடம் சாத்தூா் காவல் துறை துணை கண்காணிப்பாளா் குருசாமி, வருவாய்க் கோட்டாட்சியா் கனகராஜ் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.