பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

சோலூா் கிராமத்தில் புலி நடமாட்டம்

உதகை அருகே சோலூா் கிராமத்தில் குடியிருப்புக்கு அருகே உள்ள தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை உலவிய புலியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

உதகை அருகே சோலூா் கிராமத்தில் உலவிய புலி.

Published On :

உதகை அருகே சோலூா் கிராமத்தில் குடியிருப்புக்கு அருகே உள்ள தோட்டத்தில்  செவ்வாய்க்கிழமை உலவிய புலியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள   வனப் பகுதியில் இருந்து  யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, குடிநீா் தேடி அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், உதகை அருகே உள்ள சோலூா் கிராமத்தில் குடியிருப்புக்கு எதிரே மிக அருகில்  புலி ஒன்று  நடந்து சென்றது. இதை அங்கிருந்தவா்கள் தங்களது கைப்பேசியில்  பதிவு செய்துள்ளனா். தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புலி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத் துறையினா் புலியின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து, அதை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.