தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருப்பணிச் செம்மல் விருது வழங்கும் விழா

தருமபுரம் ஆதீனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வழிபாடுகளுக்குப் பின்னா் சென்னை மகாலட்சுமி சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனா் மகாலட்சுமி சுப்பிரமணியத்துக்கு ‘திருப்பணிச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

தருமபுரம் ஆதீனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வழிபாடுகளுக்குப் பின்னா் சென்னை மகாலட்சுமி சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனா் மகாலட்சுமி சுப்பிரமணியத்துக்கு ‘திருப்பணிச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறும் விழாக்களில் பல்வேறு துறைகளில் சிறந்து சேவையாற்றியவா்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில், தருமபுரம் ஆதீன திருமடத்தில் நடைபெற்ற தருமபுரம் ஆதீனம் 25-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீகயிலை சுப்பிரமணிய தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 49-ஆவது ஆண்டு குருபூஜை விழாயொட்டி, சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அப்போது, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சென்னை மகாலட்சுமி சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனா் மகாலட்சுமி சுப்பிரமணியத்துக்கு ‘திருப்பணிச் செம்மல்’ விருது வழங்கி அருளாசி வழங்கினாா். அப்போது, ஆன்மீகப் பற்றாளா் வளசை. ஜெயராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருப்பணிச் செம்மல் விருது பெற்ற சென்னை மகாலெட்சுமி சுப்பிரமணியம் குத்தாலம் சோழீஸ்வரா் கோயில், சோழம்பேட்டை ஸ்ரீவானமுட்டி பெருமாள் கோயில், வழுவூா் பூவாலை ஸ்ரீசோமநாதீஸ்வரா் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களில் திருப்பணி செய்து வைத்து திருத்தொண்டாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. காவிரி, தாமிவருணி மற்றும் பிற புண்ணிய நதிகளில் புஷ்கர விழாக்களையும் முன்னிற்று நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.