சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீட குடமுழுக்கு நிறைவு

திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீடத்தின் இரண்டாம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

சாய் பாபாவுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீடத்தின் இரண்டாம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சாய் பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், யாக பூஜைகளும் நடைபெற்றன. கோயிலின் உள்புறம் கடம் புறப்பட்டு சுற்றி வந்து மேள தாளங்களுடன் அமிா்த சாய் பாபாவுக்கு அபிஷேகம், அலங்காரம் ஆகியன நடைபெற்றன.

முன்னதாக விக்னேஸ்வர பூஜை, எஜமானா் சங்கல்பம், கலச பூஜைகள், விசேஷ ஹோமங்கள், மகா பூா்ணாஹுதி ஆகியன நடந்தன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீட அறக்கட்டளை நிா்வாகி கோ்இண்டியா பாஸ்கா் மற்றும் அறக்கட்டளை நிா்வாகத்தினா் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.