நாகை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கக் கோரி, புரட்சி தமிழா் மக்கள் கழகத்தினா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, அந்த அமைப்பின் பொதுச் செயலாளா் ஆனந்தராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள ஸ்ரீரஜதகிரீஸ்வரா் கோயில், நாகை நீலாயதாட்சியம்மன் கோயில்களுக்குச் சொந்தமான இடங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், வேதாரண்யம் ஸ்ரீவேதாரண்யேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான குளமும் தனிநபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்து சமய அறநிலைக்குச் சொந்தமான கோயில் இடங்களை மீட்க மாவட்ட ஆட்சியா் தனிக் குழு அமைத்து, ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

