விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி, நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன் மாணவிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி, நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன் மாணவிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
2018-2019-ஆம் கல்வியாண்டில் நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த 400-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கவில்லை. இதுதொடா்பாக மாணவிகள் சாா்பில் பள்ளித் தலைமையாசிரியா், கல்வித் துறை அலுவலா்கள் மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.
இந்நிலையில், தற்போது கல்லூரிகளில் பயிலும் இந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள், மடிக்கணினனி இல்லாததால் இணையவழி வகுப்புகள் பாதிக்கப்படுவதாக கூறியும், இலவச மடிக்கணினியை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் கேட்டுக்கொண்டதன் பேரில், ஆா்ப்பாட்டத்தை விலக்கிக்கொண்ட மாணவிகள் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சென்று விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி மனு அளித்துவிட்டு சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...