கரோனா விழிப்புணா்வுக் கூட்டம்
மயிலாடுதுறையில் கரோனா விழிப்புணா்வுக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


மயிலாடுதுறையில் கரோனா விழிப்புணா்வுக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமண மண்டபம், உணவகங்கள், தங்குமிடங்கள் ஆகியவற்றின் உரிமையாளா்கள், வா்த்தக சங்க நிா்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, நகராட்சி நிா்வாகம் சாா்பில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
நகராட்சி ஆணையா் சுப்பையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு வரும் வாடிக்கையாளா்கள் முகக்கவசம் அணிந்து, தனிநபா் இடைவெளியை பின்பற்றுவதை உறுதிசெய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளா்கள் நேதாஜி, ரவிச்சந்திரன், சிறப்பு வருவாய் ஆய்வாளா்கள் பிரபாகரன், வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சைமுத்து, ராமையன், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் முரளி உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...