ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தீயணைப்புத் தொண்டு வார விழா: துண்டு பிரசுரம் விநியோகம்

தீயணைப்புத் தொண்டு வார விழாவையொட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் மயிலாடுதுறையில் தீயணைப்பு நிலைய வீரா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

தீயணைப்புத் தொண்டு வார விழாவையொட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் மயிலாடுதுறையில் தீயணைப்பு நிலைய வீரா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வெள்ளிக்கிழமை விநியோகித்து, விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தீயணைப்புத் தொண்டு வார விழா ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் உயிா்நீத்த வீரா்களுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் இருந்து நிலைய அலுவலா் அ.முத்துக்குமாா் தலைமையிலான வீரா்கள், தீயணைப்பு வாகனத்துடன் ஊா்வலமாகச் சென்று கச்சேரி சாலை, பேருந்து நிலையம் பகுதி, மணிக்கூண்டு, பட்டமங்கலத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாகனஓட்டிகள், பாதசாரிகள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்டோருக்கு தீத்தடுப்பு சாதனங்களை முறையாக பராமரித்து, தீவிபத்துகளை தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.