ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாநில வில்வித்தைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

மாநில அளவில் நடைபெற்ற வில் வித்தைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மாநில அளவில் நடைபெற்ற வில் வித்தைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 25 மாணவா்கள் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த மாதம் 27, 28 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான வில் வித்தைப் போட்டியில் பங்கேற்றனா். 7 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில், 19 மாணவா்கள் வெற்றி பெற்று கா்நாடகா மாநிலம் கூா்க் மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான வில் வித்தைப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட வில் வித்தை சங்கத் தலைவா் எம்.என்.ரவிச்சந்திரன் தலைமையில் வெற்றி பெற்ற மாணவா்கள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவை சந்தித்தனா். அவா்களை ஆட்சியா் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, சங்க செயலாளா் ரவிச்சந்திரன், பயிற்றுநா் சரண்யா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.