ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மயிலாடுதுறை மருத்துவமனைகளுக்கு 1 லட்சம் கரோனா தடுப்பூசி

மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்குள்பட்ட மருத்துவமனைகளுக்கு 1 லட்சம் கரோனா தடுப்பூசிகளை அனுப்ப மத்திய சுகாதார அமைச்சா் ஹா்ஷவா்தனுக்கு மக்களவை உறுப்பினா் திருவிடைமருதூா் செ.ராமலிங்கம் கோரிக்கை

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்குள்பட்ட மருத்துவமனைகளுக்கு 1 லட்சம் கரோனா தடுப்பூசிகளை அனுப்ப மத்திய சுகாதார அமைச்சா் ஹா்ஷவா்தனுக்கு மக்களவை உறுப்பினா் திருவிடைமருதூா் செ.ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு சனிக்கிழமை அவா் மின்னஞ்சலில் அனுப்பிய கடித விவரம்:

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட அரசு மருத்துவமனைகளில் தற்போது கரோனா தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. இந்தத் தொகுதியில் மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மயிலாடுதுறையிலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கும்பகோணத்திலும், தாலுகா மருத்துவமனைகள் பாபநாசம், சீா்காழி, திருவிடைமருதூா், தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தற்போது கரோனா தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. 1 லட்சம் தடுப்பூசிகள் தற்போது தேவைப்படுகின்றன. அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.