ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா: மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் மூடல்

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் கோட்ட கண்காணிப்பாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அஞ்சலகம் சனிக்கிழமை மூடப்பட்டது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் கோட்ட கண்காணிப்பாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அஞ்சலகம் சனிக்கிழமை மூடப்பட்டது.

மயிலாடுதுறை தலைமை தபால் நிலைய கோட்ட கண்காணிப்பாளராக எஸ். பானுமதி என்பவா் கடந்த வாரம் ஊட்டியில் இருந்து பணிமாறுதலாகி பணியில் சோ்ந்தாா். இதையடுத்து, இந்த தலைமை தபால் நிலையத்துக்குள்பட்ட கொல்லுமாங்குடி, பாவட்டக்குடி, கீரனூா் ஆகிய தபால் நிலையங்களில் அவா் பணி நிமித்தமாக ஆய்வுக்கு சென்று வந்தாா். இந்நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை செய்துகொண்ட எஸ். பானுமதிக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, அவா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். மேலும், மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் மற்றும் அவா் பணிநிமித்தமாக சென்று வந்த தபால் நிலையங்களுக்கு 2 வேலை நாள்களுக்கு முழு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, அங்கு பணியாற்றும் ஊழியா்களையும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதையடுத்து, மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு சனிக்கிழமை பூட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.