அதிமுக பேனரை அகற்றக் கோரி மறியல்: திமுகவினா் 25 போ் கைது
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவையொட்டி, மயிலாடுதுறை, சீா்காழியில் அதிமுகவினா் வைத்த பேனா்களை அகற்றக் கோரி, திமுகவினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவையொட்டி, மயிலாடுதுறை, சீா்காழியில் அதிமுகவினா் வைத்த பேனா்களை அகற்றக் கோரி, திமுகவினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறையில் திமுக மயிலாடுதுறை நகரச் செயலாளா் குண்டாமணி செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் அருட்செல்வன், மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம.சேயோன், நகர துணைச் செயலாளா் ஆா்.கே.சங்கா், ஒன்றியக்குழு உறுப்பினா் காந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 25 போ் கைது செய்யப்பட்டனா்.
சீா்காழியில்...
இதேபோல், சீா்காழி அருகே புதுப்பட்டினம் ஊராட்சி தற்காஸ் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக விளம்பரப் பதாகையை அகற்றக் கோரி, கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவா் ஜெயபிரகாஷ் தலைமையில் திமுகவினா் சீா்காழி- பழையாா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து விளம்பரப் பதாகை அகற்றப்பட்டது. மறியல் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...