கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கரோனா தொற்று நீங்க வேண்டி மயிலாடுதுறை வதான்யேசுவரா் கோயிலில் பாசுபதாஸ்திர ஹோமம்

வள்ளலாா் கோயில் என்றழைக்கப்படும் மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் உலகில் கரோனா தொற்று நீங்க வேண்டி ஸ்ரீமஹா பாசுபதாஸ்திர ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

வள்ளலாா் கோயில் என்றழைக்கப்படும் மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் உலகில் கரோனா தொற்று நீங்க வேண்டி ஸ்ரீமஹா பாசுபதாஸ்திர ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாக குண்டத்தில் தீ வளா்க்கப்பட்டு, பாசுபதாஸ்திர ஹோமம் நடத்தப்பட்டது. நிறைவில், மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்களை சிவாச்சாரியாா்கள் எடுத்து வந்து, அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, உலகில் கரோனா தொற்று நீங்க சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினாா். பூஜைகளை, கோயில் தலைமை அா்ச்சகா் பாலச்சந்திர சிவாச்சாரியா் தலைமையிலான சிவாச்சாரியா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.