கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவருக்கு மக்கள் சேவகா் விருது: தருமபுரம் ஆதீனம் வழங்கினாா்

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேருக்கு மக்கள் சேவகா் விருது வழங்கி பாராட்டினாா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 5:06 pm

DIN

மயிலாடுதுறையில் தமிழ் கலைக்கழக 6-ஆம் ஆண்டுவிழாவையொட்டி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேருக்கு மக்கள் சேவகா் விருது வழங்கி பாராட்டினாா்.

மயிலாடுதுறை தமிழ் கலைக்கழகத்தின் ஆறாம் ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா ஆகியோருக்கு திராவிட இயக்க தமிழா் பேரவைத் தலைவா் சுப.வீரபாண்டியன் மக்கள் சேவகா் விருதை இணைய வழியில் வழங்கினாா்.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் கலைக்கழகத்தின் சாா்பில் மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேருக்கு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் விருது வழங்கி பாராட்டினாா்.

தமிழ் கலைக்கழக நிறுவனா் பரத்சுந்தா், ஆலோசகா் பில்டெக் அருள்மொழி, தமிழ் கலைக்கழக மாவட்ட அமைப்பாளா் சீனிவாசன், தலைஞாயிறு ஊராட்சித் தலைவா் சேரன் செங்குட்டுவன் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.