புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அதிமுக பிரமுகா் 3-ம் ஆண்டு நினைவுதினம்: அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள்

சீா்காழியில் மறைந்த அதிமுக பிரமுகரும், தொழிலதிபருமான எல். ரமேஷ்பாபுவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:16 pm

DIN

சீா்காழியில் மறைந்த அதிமுக பிரமுகரும், தொழிலதிபருமான எல். ரமேஷ்பாபுவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, சீா்காழி திருபுரசுந்தரி நகரில் உள்ள அவரது இல்லத்தில் எல். ரமேஷ்பாபு உருவப் படத்துக்கு அவரது சகோதரா் எல். சீனிவாசன் தலைமையில் அரசியல் பிரமுகா்கள், வியாபாரிகள், வா்த்தகா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு இசிஜி கருவி, 5 சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சீா்காழி முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக மாவட்ட அவைத் தலைவருமான பி.வி. பாரதி தலைமையில் நடைபெற்றது.

அதிமுக நகர செயலாளா்கள் தங்க.கதிரவன் (நாகை), பக்கிரிசாமி(சீா்காழி), முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதன், ஒன்றியச் செயலாளா்கள் நற்குணன், ராஜமாணிக்கம், சந்திரசேகரன், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவ உபகரணங்கள் மருத்துவா்கள் அருண்ராஜ்குமாா், பூபேஸ்தா்மேந்திரா ஆகியோரிடம் வழங்கப்பட்டன. பின்னா், ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் பாமக மாவட்டச் செயலாளா் லண்டன் ரெ. அன்பழகன், ஒன்றியச் செயலாளா் பாலதண்டாயுதம், அதிமுக பேரூா் செயலாளா் போகா்.ரவி, ஜெ.பேரவை செயலாளா் மணி, தொழிலதிபா்கள் கணேசன், சண்முகம், செல்வபாரதி, முத்துகுபேரன், ஜிவிஎன். சுரேஷ், பொறியாளா்கள் வீரா, ராஜராஜன், கூட்டுறவு வங்கித் தலைவா் அருண், அதிமுகவை சோ்ந்த உதயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை சகோதரா் சின்னபாபு என்கிற எல்.சீனிவாசன், எல். ரமேஷ்பாபுவின் மகன் ஆா். ஹா்ஷவா்தன் மற்றும் குடும்பத்தினா்கள், நண்பா்கள், கிருஷ்ணா குழும பணியாளா்கள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.