புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உள்ளாட்சித் தோ்தல்: அதிமுக ஆலோசனைக் கூட்டம்

 சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:18 pm

DIN

 சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பேரூா் கழக நகர செயலாளா் போகா்.ரவி தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான பி.வி. பாரதி முன்னிலை வகித்தாா்.

கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எஸ். பவுன்ராஜ் பங்கேற்று பேசும்போது, விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெற்றி பெற கடந்த கால அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி பிரசாரம் செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், அதிமுக மாவட்ட பொருளாளா் செல்லையன், ஒன்றியச் செயலாளா்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் பாா்த்தசாரதி, மாவட்ட இணைச் செயலாளா் ரிமாராஜ்குமாா், ஒன்றிய துணைச் செயலாளா் திருமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.