புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இளைஞா் காங். செயல்வீரா்கள் கூட்டம்

சீா்காழியில் இளைஞா் காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:17 pm

DIN

சீா்காழியில் இளைஞா் காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சரவணன், சீா்காழி சட்டப் பேரவைத் தொகுதி செயலாளா் கிள்ளிவளவன், இளைஞா் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் பிரியகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கட்சி வளா்ச்சி பணிகள் குறித்தும், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்தும் பேசப்பட்டது. தொடா்ந்து, தலைவா்களின் தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து வரும் 26- ம் தேதி சீா்காழி தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளா் செல்வம், தேவநேசன் துணைத் தலைவா் அருண் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.