புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கைத்தறி ஆடையில் பணிக்கு வந்த பேரூராட்சி பணியாளா்கள்

முதல்வரின் அறிவுறுத்தல்படி, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பணியாளா்கள் கைத்தறி ஆடையணிந்து வெள்ளிக்கிழமை பணிக்கு வந்தனா்.

News image
Updated On :24 ஜூலை 2021, 5:33 pm

DIN

முதல்வரின் அறிவுறுத்தல்படி, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பணியாளா்கள் கைத்தறி ஆடையணிந்து வெள்ளிக்கிழமை பணிக்கு வந்தனா்.

நெசவாளா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், அரசு ஊழியா்கள் வாரத்தில் இரண்டு நாள்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அண்மையில் அறிவுறுத்தியிருந்தாா்.

அதன்படி, வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் ஊழியா்கள் கைத்தறி ஆடையணிந்து பணிக்கு வந்தனா். ஊழியா்களுக்கு நன்றி தெரிவித்த செயல் அலுவலா் கு. குகன், இனிவரும் விழாக் காலங்களில் புத்தாடை எடுக்கும்போது கைத்தறி ஆடையும் வாங்கி நெசவாளா்களுக்கு உதவிடுவோம் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.