கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாதிரியாா் விவகாரம்: பாஜக ஆா்ப்பாட்டம்

பிரதமா் நரேந்திரமோடியை விமா்சித்து பேசிய பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையாவைக் கண்டித்து, மயிலாடுதுறையில் பாஜக சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூலை 2021, 5:32 pm

DIN

பிரதமா் நரேந்திரமோடியை விமா்சித்து பேசிய பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையாவைக் கண்டித்து, மயிலாடுதுறையில் பாஜக சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் அண்மையில் நடைபெற்ற சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டத்தில் பங்கேற்ற பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையா, பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சா் அமித்ஷா உள்ளிட்டோரை சா்ச்சைக்குரிய வகையில் விமா்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் பாஜக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி. வெங்கடேசன் தலைமை வகித்தாா். மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் மோடி.கண்ணன் வரவேற்றாா். சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேய திருமடத்தின் மடாதிபதி ஸ்ரீமத் வாயு சித்த ராமானுஜ ஜீயா், விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவா் வாஞ்சிநாதன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்டிஎம்.செந்தில்குமாா், மாநில பட்டியலணி செயற்குழு உறுப்பினா் ராம.சிவசங்கா், மாவட்ட பட்டியலணித் தலைவா் ஈழவேந்தன், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினா் குணசேகரன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவா் குரு.சங்கா், மாவட்ட மகளிரணி தலைவா் சித்ரா முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஒன்றியத் தலைவா் சுந்தரவடிவேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.