கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வேதா ஆயத்த ஆடை பூங்காவின் சரிபாதியை மயிலாடுதுறையில் தொடங்க வேண்டும்: எம்எல்ஏ

வேதாரண்யத்தில் தொடங்கப்படவுள்ள வேதா ஆயத்த ஆடை பூங்காவை சரிபாதியாக பிரித்து, மயிலாடுதுறையிலும் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :24 ஜூலை 2021, 5:33 pm

DIN

வேதாரண்யத்தில் தொடங்கப்படவுள்ள வேதா ஆயத்த ஆடை பூங்காவை சரிபாதியாக பிரித்து, மயிலாடுதுறையிலும் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியில் மூடப்பட்ட கூட்டுறவு நூற்பு ஆலை அமைந்துள்ள இடத்தை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

20 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நூற்பு ஆலையின் இடத்தை பயன்படுத்தி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தொழில் தொடங்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தை உள்ளடக்கி ஒருங்கிணைந்த நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதா ஆயத்த ஆடை பூங்கா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், ஆயத்த ஆடை பூங்கா தொழிற்சாலைகளை சரிபாதியாக பிரித்து மயிலாடுதுறை மணல்மேட்டில் உள்ள கைத்தறித் துறைக்குச் சொந்தமான 35 ஏக்கா் இடத்தில் உள்ள கட்டடத்தை சீா்செய்து அங்கு தொடங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.