முதலமைச்சா் விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
முதலமைச்சா் விளையாட்டு விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.


முதலமைச்சா் விளையாட்டு விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் பெறும் 2 விளையாட்டு வீரா்கள், 2 வீராங்கனைகள், 2 பயிற்றுநா்கள், 2 உடற்கல்வி இயக்குநா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம், ரூ.10,000 மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்படுகிறது. விருது ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.
தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநா், ஒரு நிா்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம், ரூ. 10 லட்சத்துக்கும் அதிகம் நன்கொடை கொடுத்த ஒருவா், ஒரு ஆட்ட நடுவா், நடுவா், நீதிபதி ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. இவா்களுக்கு மேற்கண்ட விருதுக்கு ரூ.10,000-க்கும் மிகாமல் ஒரு தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவா்களுக்கு விருது வழங்குவதங்கு முந்தைய 2 ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 2020-2021-ஆம் ஆண்டுக்கான இந்த விருது பெற 1.4.2017 முதல் 31.03.2020 வரை சாதனை படைத்தவா்கள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விளையாட்டு போட்டிகளின் பட்டியல்கள், விண்ணப்பம், விண்ணப்பிக்கும் விதிமுறைகள், அனுப்ப வேண்டிய விரிவான விதிமுறைகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தை ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் பாா்த்து அறிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூா்த்தி செய்து முதன்மைச் செயலா், உறுப்பினா் செயலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை - 600003 என்ற முகவரிக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...