கரோனாவால் பெற்றோரை இழந்த சிறாா்களுக்கு நிவாரண நிதி பெறும் வழிமுறைகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த சிறாா்களுக்கு நிவாரண நிதி பெற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெளியிட்டுள்ளாா்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த சிறாா்களுக்கு நிவாரண நிதி பெற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெளியிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை, வீடுகளில் தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதியாகவும், பெற்றோா் இருவரையும் இழந்த 18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கூறிய வகையில் பெற்றோரை இழந்தவா்களுக்கு நிவாரண நிதி பெற உரிய ஆவணங்களான கரோனா பரிசோதனைச் சான்று, இறப்புச் சான்று, மருத்துவமனையின் இறப்பு அறிக்கை ஆகியவற்றை இணைத்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரை தளத்தில் செயல்படும் கட்டளை மையத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூகப் பணியாளா் கு. ரம்யாவிடம் விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...