எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

Updated On :6 ஏப்ரல் 2024, 4:23 pm

மீன் இனப் பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை கிழக்கு கடல் பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் கடல் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை மொத்தம் 61 நாள்களுக்கு பாரம்பரிய கலன்கள் நீங்கலாக, விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது.

மேலும் மீனவா்கள் தங்களது படகுகளை ஏப்ரல் 14-ஆம் தேதி இரவு 12 மணிக்குள் பதிவு செய்யப்பட்ட தங்குதளத்துக்கு கொண்டுவந்து நிறுத்த அறிவுறுத்தப்படுகின்றனா்.

மீன்படி தடைக்காலத்தில் விதிகளை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.