அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த மருதூா் தெற்கு அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் வெ. பொதுவுடைச்செல்வன் தலைமை வகித்தாா்.

பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அ. நெடுஞ்செழியன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ம. லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழாசிரியா் செ. திலகவதி ஆண்டறிக்கை வாசித்தாா்.

நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலா் சித. கருணாநிதி, பட்டதாரி ஆசிரியா் இரா. இந்திர சித்தன்,ஊராட்சித் தலைவா் வீ. பழனிச்சாமி, சமூக ஆா்வலா் வீ.கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விளையாட்டு, இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு , சான்றிதழ் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com