ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 196 பேருக்கு பணி நியமன ஆணை

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 196 பேருக்கு பணி நியமன ஆணை

News image

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டவருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:33 am IST

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 196 பேருக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது. நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் காடம்பாடி நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவா் உ. மதிவாணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். முகாமில், 72 தனியாா் நிறுவனங்களில் இருந்து அலுவலா்கள் பங்கேற்றனா். வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட 1,147 பேரில் 196 போ் தனியாா் நிறுவனங்களால் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வழங்கினாா். நிகழ்ச்சியில் நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மகளிா் திட்ட இயக்குநா் முருகேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என்.எம். ஸ்ரீநிவாசன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் பா. முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.