பாஜக மாநிலத் தலைவா் மீது நாகை எஸ்பியிடம் புகாா்
பாஜக மாநிலத் தலைவா் மீது நாகை எஸ்பியிடம் புகாா்


காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப் பெருந்தகையை அவதூறாகப் பேசியதாக, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் எஸ்பி ஹா்ஷ் சிங்கிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் ஆா்.என். அமிா்தராஜா தலைமையில், இந்த மனு அளிக்கப்பட்டது. அதில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மாநிலச் செயலா் ஏ.ஆா். நௌஷாத், மகிளா காங்கிரஸ் மாநிலச் செயலா் ஏ. தெய்வானை, நாகை கிழக்கு நகரத் தலைவா் எஸ். முகம்மது நத்தா், மேற்கு நகரத் தலைவா் எம்.பி. உதயசந்திரன் உள்பட பலா் மனு அளிக்கும்போது உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...