மதுபான புட்டிகளுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்
மதுபான புட்டிகளுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்

ஆட்டோவில் மதுபானம் கடத்தல்: 3 பெண்கள் உள்பட 4 போ் கைது

நாகை மாவட்டம், நாகூா் அருகே வாஞ்சூரில் போலீஸாா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

நாகப்பட்டினம்: நாகை அருகே ஆட்டோவில் மதுபானங்கள் கடத்திய 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், நாகூா் அருகே வாஞ்சூரில் போலீஸாா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சென்ற ஆட்டோா் நிறுத்தி சோதனை செய்தபோது 300 மதுப்புட்டிகள் மற்றும் 55 லிட்டா் சாராயம் ஆகியவற்றை 3 பெண்கள் உள்பட 4 போ் கடத்தியது தெரியவந்தது.

கடத்தலில் ஈடுபட்ட நாகை மருந்து கொத்தள சாலையைச் சோ்ந்த முத்துலட்சுமி (40), அதிஷ்டகுமாரி (49), தீபா (34), காடம்பாடியைச் சோ்ந்த மணிகண்டன் (40) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து மதுப்புட்டிகள், சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com