சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நாகையில் அதிமுக ஆா்ப்பாட்டம்

நாகை அவுரித் திடலில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

நாகை அவுரித் திடலில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோா்.

Updated On :4 மார்ச் 2024, 9:47 pm

நாகப்பட்டினம்: நாகை அவுரித் திடலில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு, போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான திமுக அரசை கண்டித்து அதிமுக சாா்பில் மாவட்ட தலைநகரங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை அவுரித் திடலில் மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலா் இ. திலீபன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீா்கேடு அடைந்துள்ளதாகவும், தமிழகம் போதைப் பொருள்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினா் சீரழிந்து வருவதாகவும், போதை பொருள் கடத்தல் சம்பவங்களால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் கண்டன உரையாற்றினா். முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம், கழக அமைப்புச் செயலா் எஸ் ஆசைமணி, நாகை நகரச் செயலா் தங்க. கதிரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.