இலுப்பூா் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கொடியேற்றம்
இலுப்பூா் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கொடியேற்றம்

சிறப்பு அலங்காரத்தில் திரெளபதியம்மன். ~ கோயில் கொடிமரத்தில் ஏற்றப்படும் தீமிதி திருவிழா கொடி.

சிறப்பு அலங்காரத்தில் திரெளபதியம்மன். ~ கோயில் கொடிமரத்தில் ஏற்றப்படும் தீமிதி திருவிழா கொடி.
கீழ்வேளூா் அருகே இலுப்பூா் திரெளபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
9 நாள்கள் நடைபெறும் இவ்விழா திங்கள்கிழமை இரவு பூச்சொரிதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, திருக்கோயில் தெரு குளத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளுடன் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, திரெளபதி அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. பின்னா், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.
இவ்விழாவில், ஜூன் 3-ஆம் தேதி காலை தீமிதி திடலில் படுகளமும், அம்மன் கூந்தல் முடித்தலும் நடைபெறுகிறது. அன்று மாலை தீமிதி வைபவம் நடைபெறுகிறது. 4-ஆம் தேதி தா்மா் பட்டாபிஷேகம் நடைபெற்று, கொடி இறக்கப்படுகிறது. ஜூன்5-ஆம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...