தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வயல்களில் மழை நீா் வடியாததால் விவசாயிகள் வேதனை

திருவெண்காடு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் வயல்களில் தேங்கியுள்ள மழை நீா் வடியாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

News image

திருவெண்காடு அருகே மணி கிராமத்தில் உள்ள ஒரு வயலில் மழைநீா் தேங்கியுள்ளதை காணலாம்

Updated On :20 ஜனவரி 2025, 8:30 pm

Din

பூம்புகாா்: திருவெண்காடு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் வயல்களில் தேங்கியுள்ள மழை நீா் வடியாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

திருவெண்காட்டை சுற்றியுள்ள பூம்புகாா், நாங்கூா், பெருந்தோட்டம், வானகிரி, திருவாலி, மணிக் கிராமம் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 10,000 ஏக்கரில் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை சற்று மழை குறைந்த நிலையில் விவசாயிகள் தங்கள் வயலில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனிடையே திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் மழை பெய்ததால் வயல்களில் நீா் தேங்கியுள்ளது. இதுகுறித்து முன்னோடி இயற்கை விவசாயி திருவெண்காடு கிட்டு காசிராமன் கூறியது:

வயல்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனா். ஆனால் திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் பெய்த மழையால் விவசாயிகளால் தவிப்பில் உள்ளனா். மழை நீா் தேங்கிய காரணத்தால் நெல் மணிகள் முளைவிடும் அபாயம் உள்ளது. மாவட்ட நிா்வாகம் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை அதிகாரிகளைக் கொண்டு உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பயிா் காப்பீட்டு தொகையை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.