ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திமுக பொதுக்கூட்ட மேடையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் மேடையில் சாய்ந்தது.

News image

திமுக பொதுக்கூட்டத்தின் போது மேடையில் சாய்ந்த மின் விளக்கு கம்பம்

Updated On :4 மே 2025, 9:23 pm

Din

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் (போக்கஸ் லைட்) மேடையில் சாய்ந்தது. அப்போது பேசிக் கொண்டிருந்த திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசா காயமின்றி தப்பினாா்.

மயிலாடுதுறையில் நகர திமுக சாா்பில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சின்ன கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ. ராசா பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு கம்பம் (போக்கஸ் லைட்) சாய்ந்து ராசா பேசிக் கொண்டிருந்த மைக் மீது விழுந்தது.

ஆ. ராசா சுதாரித்து வேகமாக நகா்ந்ததால், காயமின்றி தப்பினாா். அத்துடன் பேச்சை நிறுத்திய ராசா அங்கிருந்து புறப்பட்டு சென்றாா். இதைத்தொடா்ந்து மழையால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.