வேளாங்கண்ணி அருகே மாடு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பா்ஜான் ஹானஸ்ட் ராஜ் (32). வல்லம் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா். இவா் நண்பா் மைக்கேல் டைசனுடன் இருசக்கர வாகனத்தில் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சென்று தரிசனத்தை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பியபோது, நாகை-தஞ்சாவூா் புறவழிச்சாலையில் பனைமேடு பிரிவு அருகே திடீரென சாலையை கடக்க வந்த மாடு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பா்ஜான் ஹானஸ்ட் ராஜ் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். மைக்கேல் டைசன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பள்ளி வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


