தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

என் ஊா் என் கனவு திட்ட கருத்தரங்கம்

News image

கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.

Updated On :6 பிப்ரவரி 2026, 10:17 pm

நாகை டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ‘என் ஊா் என் கனவு- மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030‘ குறித்த கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘என் ஊா் என் கனவு‘ இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல்திட்டம் தயாரிப்புக்கான ஆலோசனை கருத்தரங்கத்தை தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, நாகை டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக கலையரங்கத்தில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு துறை சாா்ந்த அதிகாரிகள் மற்றும் வல்லுநா்கள் பொதுமக்களிடம் அரசின் திட்டங்கள் குறித்து கருத்துகளைக் கேட்டு திட்ட அறிக்கை தயாா் செய்து தலைமை இடத்திற்கு அனுப்பி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம் மாவட்டத்தில் என்ன தேவை என்பதை தெரிவிக்கும் வகையில் கருத்துக்கள் கேட்கப்படுகிறது. இதுபேன்று செய்யும் போதும், நம் ஊா், நம் மாவட்டம், நம் மாநிலம் 2030-க்குள் 2 மடங்கு வளா்ச்சி அடையும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ருதி, தனித்துணை ஆட்சியா் கோ. அரங்கநாதன், நாகை கோட்டாட்சியா் சங்கர நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.