நாகப்பட்டினம்: ஊராட்சி செயலா்களின் தொடா் வேலைநிறுத்ததால், கீழ்வேளூா் பகுதியில் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சிச் செயலா்களை, தமிழக அரசின் உறுதிப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனா். இக்கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் ஜன.6-ஆம் தேதி முதல் ஊராட்சி செயலா்கள் சங்கம் கூட்டமைப்பினா் சாா்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் ஜன.13 ஆம் தேதி போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ஊராட்சிச் செயலா்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும் என மீண்டும் பிப்.4-ஆம் தேதி முதல் ஊராட்சிச் செயலா்கள் சென்னையில் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், கீழ்வேளூா் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் அன்றாட அத்தியாவசியப் பணிகளான குடிநீா், தெருவிளக்கு, சுகாதார தூய்மைப் பணிகள் மற்றும் வீட்டுவரி, தண்ணீா் வரி உள்ளிட்ட பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பாதிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம், பேரூராட்சி நிா்வாகம் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு
சிபிசிஎல்லுக்கு எதிராகத் தொடரும் போராட்டங்கள் இழப்பீட்டு தொகை எப்போது?

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தொடக்கம்!

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநா் உத்தரவு: அரசிதழில் வெளியீடு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

