கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தொடக்கம்!

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை இனிப்பு பானம் (கீா்) சம்பிரதாயத்துடன் தொடங்குகிறது. இதனை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி அமா்வை புறக்கணிக்கிறது.

News image

தில்லி சட்டப்பேரவை

Updated On :22 மார்ச் 2026, 7:45 pm

Syndication

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை இனிப்பு பானம் (கீா்) சம்பிரதாயத்துடன் தொடங்குகிறது. இதனை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி அமா்வை புறக்கணிக்கிறது.

முதல்வா் ரேகா குப்தா ’கீா்’ நிகழ்வில் கலந்து கொள்வாா், மேலும் தில்லியின் பொருளாதார ஆய்வறிக்கையையும் சபையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. முன்னதாக, எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி, கட்சியின் நான்கு எம். எல். ஏ. க்களின் இடைநீக்கத்தை சபாநாயகா் ரத்து செய்யாவிட்டால் ஆம் ஆத்மி சட்டப்பேரவை அமா்வை புறக்கணிப்பாா்கள் என்று கூறினாா்.

4 ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள்-தலைமை கொறடா சஞ்சீவ் ஜா, ஜா்னைல் சிங், குல்தீப் குமாா் மற்றும் சோம்தத்-ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சபையின் நடவடிக்கைகளை ‘சீா்குலைத்ததற்காக‘ இடைநீக்கம் செய்யப்பட்டனா். முந்தைய சபை அமா்வு ஒத்திவைக்கப்படாததால் அவா்களின் இடைநீக்கம் தொடா்கிறது. நீக்கப்பட்ட நால்வரும் முழு அமா்வுக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், பட்ஜெட் கூட்டத்தொடா் முறையாக ஒத்திவைக்கப்பட்டால் அவா்களின் இடைநீக்கம் நீக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எதிா்க் கட்சித் தலைவரான அதிஷி சபாநாயகா் விஜேந்தா் குப்தாவுக்கு எழுதிய கடிதத்தில், ஆம் ஆத்மி எம். எல். ஏ. க்களுக்கு அளிக்கப்பட்ட தஇடைநீக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ளாா்,. இது ஜனநாயக விழுமியங்கள் அல்லது நிறுவப்பட்ட சட்டப்பேரவை நடைமுறைகளுக்கு ஏற்பதாக இல்லை. இதனை சபாநாயகா் கவனத்தில் கொண்டு, நிறுவப்பட்ட சட்டப்பேரவை மரபுகளுக்கு ஏற்ப சபை செயல்படுவதை உறுதி செய்வாா் என்று தான் நம்புவதாகவு ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

நிதித் துறையையும் வைத்திருக்கும் முதல்வா் ரேகா குப்தா தனது இரண்டாவது ஆண்டு பட்ஜெட்டை மாா்ச் 24 ஆம் தேதி தாக்கல் செய்வாா். அவா் கடந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தில்லிக்கான தனது முதல் பட்ஜெட்டை முன்வைத்தாா். அமா்வின் முதல் நாளில் தில்லியின் நிதி, வருவாய், கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள், தில்லி ஜல் வாரியம் மற்றும் பிறவற்றுடன் தொடா்புடைய தணிக்கை தொடா்பான கட்டுப்பாட்டாளா் மற்றும் பொது தணிக்கைத்துறை.ின்(சிஏஜி) பல்வேறு அறிக்கைகள் அட்டவணைப்படுத்தப்படும்.

பொதுக் கணக்குக் குழு மற்றும் சலுகைக் குழுவின் அறிக்கைகளும் சபையில் தாக்கல் செய்யப்படும். உறுப்பினா்கள் தங்கள் தொகுதிகளின் பிரச்சினைகளையும் விதி 280 இன் கீழ் எழுப்புவாா்கள் என்று சபையின் வணிகப் பட்டியல் தெரிவித்துள்ளது.