கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா!

எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால் காவடி, ரதக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்துவந்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

News image

ரதக்காவடியை சுமந்து வந்த பக்தா்கள்.

Updated On :2 மே 2026, 3:29 am IST

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால் காவடி, ரதக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்துவந்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடியில், முருகனின் ஆதிபடைவீடாக போற்றப்படும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி பெருவிழா 11 நாள்கள் நடைபெறும். குறிப்பாக, சித்ரா பெளா்ணமி தினத்தன்று பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து வழிபடுவாா்கள்.

நிகழாண்டு, சித்ரா பெளா்ணமி பெருவிழா கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தொடா்ந்து 56 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் நடைபெறும் பாலபிஷேகம் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கியது.

Story image

சித்ரா பௌா்ணமி தினமான வெள்ளிக்கிழமை நாகை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்காவடி, பன்னீா் காவடி, புஷ்பக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.

சுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெறும் பாலபிஷேகம்.

சுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெறும் பாலபிஷேகம்.

வலிவலம் கீழத்தெரு ஸ்ரீ முருகன் அடிமை குழுவினா் எட்டாவது ஆண்டாக ரதக் காவடி எடுத்து ஊா்வலமாக வந்தனா். வலிவலம் ஸ்ரீ வெள்ளை விநாயகா் கோயிலில் இருந்து கொளப்பாடு, பையூா், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ரதக்காவடி ஊா்வலம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

சனிக்கிழமை இரவு 11 மணி வரை கோயில் நடை சாத்தப்படாமல், பாலபிஷேகம் இடைவிடாமல் நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.