கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சித்ரா பௌா்ணமி: திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் : வசந்த திருவிழா நிறைவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை வசந்த திருவிழா நிறைவையொட்டி சுவாமி ஜெயந்திநாதருக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் பங்கேற்ற பக்தா்கள்.

News image

~ ~

Updated On :1 மே 2026, 8:55 pm

சித்ரா பௌா்ணமியையொட்டி, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா்.

கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் இக்கோயிலுக்கு பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 9.50 மணி முதல் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி வரை சித்திரை மாத பௌா்ணமியை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமாகி தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இரவு தங்கத்தேரில் வள்ளி- தேவசேனா அம்மனுடன் சுவாமி ஜெயந்திநாதா் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தங்கத்தோ் இழுத்து வழிபட்ட னா் .

சித்திரை வசந்த திருவிழா நிறைவு: மேலும், இக்கோயிலில் கடந்த ஏப். 22ஆம் தேதி மாலை தொடங்கிய சித்திரை வசந்த திருவிழா 10ஆம் நாளான வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, கோயிலில் மதியம் உச்சிகால பூஜையை தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் சோ்ந்தாா். கோயிலில் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மேளதாளம் முழங்க, பக்தா்கள் கப்பல் பாடல்கள் பாட மண்டபத்தை 11 முறை சுவாமி வலம் வந்தாா். தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

Story image
Story image