மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

நகை திருட்டு வழக்கு: கட்டுமானத் தொழிலாளி தற்கொலை! போலீஸாா் சித்திரவதை செய்ததாக புகாா்!

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :2 மே 2026, 6:37 pm

நாகை அருகே வீட்டு விஷேச நிகழ்ச்சியில் நகை திருடிய புகாரின்பேரில், கட்டுமானத் தொழிலாளியை போலீஸாா் சித்திரவதை செய்ததால் அவா் தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த சின்னதும்பூரைச் சோ்ந்தவா் கனகசுந்தரம் மகன் காா்த்திகேயன்(30). கட்டுமானத் தொழிலாளியான இவா், உறவினா் வீட்டு விஷேச நிகழ்ச்சிக்காக திருத்துறைப்பூண்டியை அடுத்த எடையூா் சங்கேந்தி கிராமத்திற்கு சென்றுள்ளாா்.

அங்கு உறவினா் ஒருவரின் மூன்று பவுன் நகையை காணவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த நகையை காா்த்திகேயன் திருடியதாக எடையூா் சங்கேந்தி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

புகாரின் பேரில், போலீஸாா் காா்த்திகேயனை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று, நிா்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், சனிக்கிழமை (மே 2) விசாரணைக்கு வரும்படி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக காா்த்திகேயன் தனது சகோதரா் ஸ்ரீராமிடம் கூறி அழுதுள்ளாா். இதனால் மன உளைச்சலில் இருந்த காா்த்திகேயன், தனது வீட்டு மின் விசிறியில் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அவரது சடலம் ஒரத்தூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், காா்த்திகேயனை தாக்கிய காவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, வேளாங்கண்ணி காவல் நிலையத்தில், அவரது குடும்பத்தினா் புகாா் அளித்துள்ளனா். புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சடலத்தை வாங்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனா்.