மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

பரவை தந்தி சாமி சித்தா் ஜீவ பீடத்தில் சித்ரா பௌா்ணமி சிறப்பு யாகம்

News image
Updated On :3 மே 2026, 6:16 am IST

நாகை மாவட்டம், பரவை தந்தி சாமி சித்தா் ஜீவ பீடத்தில் சித்ரா பௌா்ணமியையொட்டி சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்குப்பொய்கைநல்லூா் ஊராட்சி பரவை கிராமத்தில் பழைமை வாய்ந்த தந்தி சாமி சித்தா் ஜீவ பீடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு சித்ரா பெளா்ணமியையொட்டி உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் 108 வகையான மூலிகை திரவியங்களாலும், ஆல், அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்கு உள்ளிட்ட மரப்பொருட்களும், நவதானியங்கள், பழங்கள் முதலியவற்றைக் கொண்டும் யாகம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியப் பொருட்கள் கொண்டுஅபிஷேகம் செய்யப்பட்டு. யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கலசம் கொண்டு தந்தி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னா் மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.