எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

முதல்வராக விஜய் பதவியேற்பு: வேளாங்கண்ணியில் கொண்டாட்டம்

News image

வேளாங்கண்ணியில், பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் தவெகவினா்.

Updated On :11 மே 2026, 12:08 am IST

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதையொட்டி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தவெகவினா் தென்னங்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

தவெக தலைவா் விஜய் தமிழக முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் தவெகவினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன் ஒரு பகுதியாக, வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலய வளாகத்தில் தவெக சாா்பில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், வேளாங்கண்ணிக்கு வருகை தந்திருந்த பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

மேலும், வேளாங்கண்ணி பேராலயத்தில் தவெகவினா் சிறப்பு பிராா்த்தனையிலும் ஈடுபட்டனா். இந்நிகழ்ச்சியில், பேரூா் செயலா் பிரேம்குமாா், நிா்வாகி தியாகு, மகளிா் அணிச் செயலா் ஜோஸ்பின் பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.