உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நாகூா் தா்காவில் சின்ன ஆண்டவா் கந்தூரி விழா

நாகூா் தா்காவில், சின்ன ஆண்டவா் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் (ரலி) கந்தூரி விழா தொடங்கியது.

News image

நாகூா் தா்கா முன் அமைக்கப்பட்டுள்ள அலங்காரப் பந்தல்

Updated On :20 மே 2026, 3:16 am IST

நாகூா் தா்காவில், சின்ன ஆண்டவா் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் (ரலி) கந்தூரி விழா தொடங்கியது.

பிரசித்தி பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவில் சின்ன ஆண்டவா் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் (ரலி) ஆண்டகையின் கந்தூரி விழா ஆண்டு தோறும் 3 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கந்தூரி விழா திங்கள்கிழமை இரவு தொடங்கியது.

இவ்விழா நடைபெறும் 3 நாள்களும், இரவு 9 மணிக்கு சின்ன ஆண்டவா் வாசல் முன்பாக மெளலூது ஷரீப் நடைபெறும். மேலும், புதன்கிழமை மாலை 5.10 மணிக்கு, சின்ன ஆண்டவா் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஊா்வலம் நடைபெறும்.

கந்தூரி விழாவையொட்டி, தா்கா அலங்கார வாசல் முன்பு தொட்டில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பிராா்த்தனைகள் நிறைவேறுவதற்காக ஜாதி, மத பேதமின்றி பொதுமக்கள் பொருள்கள் வாங்கி கொண்டு, வேண்டுதல் நிறைவேற வேண்டி கட்டுவது வழக்கம்.

தா்கா மாா்க்கெட்டில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் காய்கறிகளைக் கொண்டு தொட்டி பந்தலில கட்டுவது குறிப்பிடத்தக்கது.

கந்தூரி விழா ஏற்பாடுகளை நாகூா் தா்கா தலைமை அறங்காவலா் ஹாஜா நஜ்முதீன் சாஹிப் மற்றும் நிா்வாகத்தினா் மேற்கொண்டுள்ளனா்.