மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்காலில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இயக்கத் தலைவர் எஸ். அனந்தகுமார் தலைமை வகித்தார்.
மக்களின் நீராதார அடிப்படை உரிமையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு அலட்சியமாக இருப்பது தவறு. காரைக்காலில் நீர்நிலைகளைப் பராமரித்து மேம்படுத்த வேண்டும்.
புதுச்சேரி அரசை கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும்.
மாநிலத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில் சீரிய நிர்வாகத்தை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
வன்னியர் வளர்ச்சி இயக்கத் தலைவர் விஜயகுமார், தேசிய மீனவர் பேரவை துணைத் தலைவர் குமாரவேல், சமூக ஆர்வலர் பாலு, இயக்கத்தின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் முல்லைவேந்தன், ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜசேகர் உள்ளிட்டோர் இயக்கத்தின் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர். இயக்கப் பொருளாளர் ராஜதுரை நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூர்யவன்ஷியை மிரட்டிய ஜேமிசனுக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளி!
சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வு
சிலிண்டர் ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க ஹோட்டல் சங்கம் கோரிக்கை

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஏழூர் சப்தஸ்தான புறப்பாடு விழா!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

