அட்சய திருதியை நாளை முன்னிட்டு, காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கருட வாகனத்தில் புதன்கிழமை வீதியுலாவுக்கு எழுந்தருளினார்.
அட்சயை என்பதற்கு பெருகட்டும் என்ற பொருள் கூறப்படுகிறது. குசேலனிடமிருந்த அவலை ஒரு பிடி எடுத்து கண்ணன் அட்சயை என்று போட்டபோது சகல செல்வங்களும் பெருகியதாக வரலாறு. இந்த நிகழ்வு திருதியை திதியில் நடந்ததால் அட்சய திருதியை என்று கோயில்களில் வழிபாடும், மக்களிடையே தங்க ஆபரணங்கள் வாங்கும் விதமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் வைணவத் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவையாக கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் நித்யகல்யாணப் பெருமாள் பெரிய மாட வீதி எழுந்தருளினார். வீதியுலா முடிந்து கோயிலுக்குத் திரும்பிய பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை நடத்தப்பட்டது.
காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமப் பெருமாள் கோயிலில் சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை நடைபெற்றது.
திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ ரகுநாதப் பெருமாள் ஸ்ரீ வீழிவரதராஜப் பெருமாள் கோயிலிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நகைக் கடைகளில் கூட்டம் குறைவு : அட்சய திருதியை நாளில் தங்க நகைகள் வாங்குவது சிறப்பு என்று கூறப்படுவதால், காரைக்காலில் உள்ள நகைக் கடைகள் வாயிலில் வாழை மரம், தோரணம் கட்டி வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நகைக் கடைகள் பெரும்பாலானவற்றில் மக்கள் கூட்டமாக காணப்படுவது கடந்த ஆண்டுகளில் இருந்தது. ஆனால், நிகழாண்டு அவ்வாறான நிலை இல்லை. மக்கள் ஆர்வமாக நகைக் கடைகளுக்கு திரளாக பங்கேற்கும் சூழல் இல்லை. இதற்கான காரணம் உறுதியாக தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

அதிமுகவில் அணிமாறிய 3 எம்எல்ஏக்கள்? எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பின்னடைவு!

ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையதுதான்: சுரேஷ் ரெய்னா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


