இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இலவச யோகா பயிற்சி

காரைக்கால் பள்ளியில் இந்திய ஆயுஷ் அமைச்சக ஆதரவுடன் மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On :18 ஏப்ரல் 2018, 6:52 am IST

காரைக்கால் பள்ளியில் இந்திய ஆயுஷ் அமைச்சக ஆதரவுடன் மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் யோகா மற்றும் ஆராய்ச்சி மையம், காரைக்கால் கலெக்ஸோ சேவை அமைப்பு ஆகியவை இணைந்து, காரைக்கால் காவிரி பொதுப் பள்ளியில் சுவாமி விவேகானந்தா யோகா பூங்கா மூலம் யோகா பயிற்சி அண்மையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் சிவகுமார் தலைமை வகித்தார்.
கலெக்ஸோ சேவை அமைப்பின் ஆலோசனைக் குழு தலைவர் பாரீஸ்ரவி, யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், கோட்டுச்சேரி கலெக்ஸோ மையத்தில் நடைபெற்றுவரும் இலவச யோகா பயிற்சி குறித்தும் மாணவ மாணவியருக்கு விளக்கிப் பேசினார்.
மன அழுத்தம் நீங்கி, மனம் ஒருமைப்படுவதால் கல்வி மேம்படும். எனவே மாணவர்கள் யோகா பயிற்சியை கண்டிப்பாக தகுதியானவர்களிடம் பெற்று, தினமும் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
யோகா பேராசிரியர் ஆனந்த், மாணவ மாணவியருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் சுமார் 100 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அருள் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.