/

துணைநிலை ஆளுநர்  காணொலி மூலம் நாளை குறை கேட்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம்  வெள்ளிக்கிழமை குறைகளைக் கேட்கவுள்ளார். 

Updated On :2 ஆகஸ்ட் 2018, 5:54 am IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம்  வெள்ளிக்கிழமை குறைகளைக் கேட்கவுள்ளார். 
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்  ஆர்.கேசவன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :  புதுச்சேரி துணைநிலை ஆளுநர்,   காரைக்கால் மாவட்ட மக்களிடம் குறைகளைக் காணொலி மூலம்  கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (3.8.2018) மாலை 5  முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தக்  கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளைத்  தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், 3-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். புகார்களை எழுத்து வடிவில் அளிக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.